கர்நாடக மாநிலம் உத்தர கனடா மாவட்டம் அருகே உள்ள எல்லாபூர் பகுதியில் வசித்து வரும் ரஞ்சிதா (30) என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அஸ்வின் என்பவருக்கும் கலந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் ஒரு குழந்தையும் உள்ளது. அஸ்வின் வீட்டுக்கு அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு ரஞ்சிதா தன்னுடைய கணவரை பிரிந்து தாய் வீட்டில் வாழ்ந்து வருகின்றார். இதனிடையே ரஞ்சிதாவிற்கு அரசு பள்ளியில் சத்துணவு மேற்பார்வையாளர் வேலை கிடைத்ததால் தாய் வீட்டில் தங்கி வேலை பார்த்து வருகிறார். அப்போது ரஞ்சிதாவிற்கு அதே பகுதியை சேர்ந்த ரஃபீக் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் அவர் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.
இதனால் இவர்களுடைய பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது. ரபீக் ரஜிதாவை திருமணம் செய்து கொள்ள அவருடைய வீட்டில் கேட்டபோது அதற்கு ரஞ்சிதாவின் பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும் ரஞ்சிதாவிடம் ரபீக், உன் குழந்தையை விட்டு வந்துடு, நீ எனக்கு மட்டும்தான் சொந்தம், நான் உன்னை நன்றாக பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இதனால் ரஞ்சிதாவும் தனது குழந்தைக்காக ரஃபி கூட நான் திருமணத்தை மறுத்துவிட்டு அவருடன் பேசுவதை தவிர்த்து வந்தார்.
இதனால் கோபம் அடைந்த ரஃபி வேலை முடிந்து நடந்து வந்து கொண்டிருந்த ரஞ்சிதாவை வழிமறித்து அவரிடம் மீண்டும் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போதும் ரஞ்சிதா திருமணத்திற்கு மறுத்ததால் ஆத்திரமடைந்த வாலிபர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரஞ்சிதாவின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரஞ்சிதாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் சிகிச்சை பலனின்றி ரஞ்சிதா உயிரிழந்து விட்டார். இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ரஃபீக்கை தேடி வந்த நிலையில் அப்ப பகுதியில் உள்ள ஒரு காட்டில் அவர் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். திருமணத்திற்கு மறுத்த காதலியை கொன்றுவிட்டு காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்காக அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்…
திமுக ஐடி விங்கின் மாநில துணைச் செயலாளரும், பிரபல ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ், தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக…
புதுச்சேரியில் விடுதி மேலாளர் ஒருவரிடம் நூதன முறையில் லட்சக்கணக்கில் பணம் தருவதாக ஆசை காட்டி மோசடி செய்த கும்பல் குறித்துப்…