மணிமேகலை செஞ்சது எவ்ளோ பெரிய விஷயம்.. என் தம்பி வாழ்க்கையை பிரியங்கா.. சுசித்ரா வெளியிட்ட வீடியோ..!!

By Priya Ram on செப்டம்பர் 20, 2024

Spread the love

பிரபல பாடகியான சுசித்ரா முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு சுச்சி லீக்ஸ் என்ற விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் பிறகு அவர் சோசியல் மீடியாவில் தலை காட்டவில்லை.  இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த சீசனில் மணிமேகலை ஆங்கர் ஆக வேலை பார்த்தார்.  ஆனால் அவருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் பிரியங்காவுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.

   

 

   

இதனால் மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டார். இப்போது சோஷியல் மீடியாவில் இது பற்றிய பேச்சுகள் தான் அடிபடுகிறது. பலரும் மணிமேகலையின் துணிச்சலான செயலுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இன்னொரு பக்கம் பலரும் பிரியங்காவை சோசியல் மீடியாவில் திட்டி தீர்க்கின்றனர். மணிமேகலை சுயமரியாதை தான் முக்கியம் அதனால் நிகழ்ச்சியிலிருந்து விளக்குகிறேன் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவை வெளியிட்டு இருந்தார்.

 

இந்த நிலையில் பிரபல பாடகியான சுசித்ரா ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது, குக் வித் கோமாளி நிகழ்ச்சி என்ன அவ்வளவு முக்கியமா..? நான் ஏன் மணிமேகலைக்கு சப்போர்ட் பண்ணி வீடியோ போடுறேன் தெரியுமா.? ஒரு நிகழ்ச்சி அப்படிங்கறது தாண்டி ஒரு Bully பத்தி இவ்வளவு கண்ணியமா பேசி அந்த டாக்ஸிக் ஜோன்ல இருந்து கிளம்பிட்டு கிளியரா அங்க என்ன நடந்துச்சு அப்படின்னு அந்த பொண்ணு மணிமேகலை ஒரு வீடியோ போட்டு இருக்காங்க.

மணிமேகலைக்கு நான் ரொம்ப மதிப்பு கொடுக்கிறேன். நான் மணிமேகலைக்கு தான் சப்போர்ட் பண்ணுகிறேன். பிரியங்கா எப்படிப்பட்ட பொம்பளைன்னு அவங்க எக்ஸ் ஹஸ்பண்ட் கிட்ட பேசினா தெரியும். அந்த பையன் என்னோட தம்பி மாதிரி. அவன் ரொம்ப நல்ல பையன். அவனோட வாழ்க்கையை பிரியங்கா நாசமாக்கிட்டா. இதெல்லாம் பத்தி பேசினா நான் ரூமர் சொல்றேன்னு சொல்லுவாங்க. இந்த வீடியோ எதுக்குன்னா நான் மணிமேகலைக்கு சப்போர்ட் பண்றேன் அப்படின்னு சொல்றதுக்கு தான் என சுசித்ரா கூறியுள்ளார்.

author avatar
Priya Ram