40 வயதில் இப்படி ஒரு அழகா?… இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!… லேட்டஸ்ட் கிளிக்ஸ்!… கிறங்கி போன ரசிகர்கள்!…

By Begam

Published on:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாகிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இணையத்தில் பகிர்ந்துள்ள சமீபத்திய புகைப்படங்கள் படு வைரலாகி வருகிறது.

இந்திய சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் தற்பொழுது பிரபல இயக்குனராக வலம் வந்து கொண்டுள்ளார். 3, வை ராஜா வை என பல படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தற்போது லால் சலாம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

   

இத்திரைப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இணைந்து நடிக்கின்றனர். இத்திரைப்படம் கிரிக்கெட் சம்பந்தப்பட்டது என்றும் கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் அவ்வப்பொழுது தனது மகன்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும், தனது குடும்ப புகைப்படத்தையும் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.

தற்பொழுது அவர் இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் ’40 வயதில் இப்படி ஒரு அழகா? இவர் சினிமாவில் கூட ஹீரோயினாக நடிக்கலாமே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்….