2008 ஆம் ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பை பெற்று சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘சுப்ரமணியபுரம்’. இத்திரைப்படத்தை சசிகுமார் இயக்கி நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் ஜெய், சுவாதி, சமுத்திரக்கனி, கஞ்சா கருப்பு உள்ளிடோர் நடித்திருந்தனர். சுப்ரமணியபுரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அந்த படத்தில் இடம்பெற்ற ‘கண்கள் இரண்டால்’ என்ற பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமில்லாமல் விமர்சன ரீதியாகவும் பாராட்டுகளை பெற்றது.
இத்திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சுவாதி. இதைத்தொடர்ந்து கனிமொழி, போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, யட்சன், போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் திரைப்பட நடிகை மட்டுமல்ல டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ,பின்னணி பாடகி ,என பன்முக திறமைகளை கொண்டவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் , என பலமொழி படங்களில் நடித்துள்ளார். நடிகை சுவாதி இந்தோனேசியாவைச் சார்ந்த விகாஸ் என்பவரை 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
விகாஸ் ஏர்லைன்ஸ்ஸில் பணிபுரிந்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு இவர் ஒரே மலையாளத்தில் மட்டும் நடித்தார். அதன் பிறகு தன் குடும்பத்தை கவனித்து வந்தார். இந்நிலையில் நடிகை சுவாதி கணவரை பிரிந்துவிட்டதாக இணையத்தில் பரவலாக கூறப்பட்டு வருகிறது. தற்பொழுது இவர் நீண்ட நாட்களுக்கு பிறகு சினிமாவில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்க உள்ளார். இயக்குனர் ஸ்ரீகாந்த் நாகோடி இயக்கத்தில் உருவாகி உள்ள ‘மந்த் ஆஃப் மது’ படத்தின் மூலம் திரையுலகில் மீண்டும் கால் பதிக்க உள்ளார்.
இத்திரைப்படத்தில் நவீன் சந்திரா, ஸ்வாதி, ஸ்ரேயா நவிலே ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டுவிழா நேற்று நடைபெற்றது. இதில் பேசிய சாய் தரம் தேஜ், கல்லூரி நாட்களில் இருந்தே ஸ்வாதி என் சிறந்த தோழி. இந்தப் படம் சுவாதிக்கு நல்ல வெற்றியைக் கொடுக்க வேண்டும் என கூறினார். இதை கேட்டுக்கொண்டிருந்த ஸ்வாதி அவரை கட்டிப்பிடித்து மேடையிலேயே முத்தம் கொடுத்தார். சுவாதியின் இந்த செயல் மேடையில் இருந்தவர்களை முகம் சுளிக்க செய்தது. இதுதொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…