ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமை ஆகி திருட்டு வழக்கில் பறிமுதல் செய்த நகையை அடகு வைத்ததோடு தன்னுடைய சர்வீஸ் துப்பாக்கியை அடகு வைத்த சப்-இன்ஸ்பெக்டரின் செயல் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் ராயச்சோடி பகுதியை சேர்ந்த பானு பிரகாஷ் ரெட்டி என்பவர் தெலுங்கானாவில் 2020 பேட்ச்சை சேர்ந்த சப் இன்ஸ்பெக்டராக தேர்வு செய்யப்பட்டார். கடந்த ஆண்டு அவர் அம்பர் பேட்டை காவல் நிலையத்தில் துப்பறியும் எஸ் ஐ யாக பணியில் சேர்ந்தார். இருந்தாலும் கடந்த சில நாட்களில் அவர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி விட்டார். இதனால் லட்சக்கணக்கான பணத்தை இழந்து கடனில் சிக்கிவிட்டார்.
இதனால் ஒரு திருட்டு வழக்கில் மீட்கப்பட்ட 8 சவரன் தங்கத்தை எடுத்து விற்று பணம் பெற்றுள்ளார். அது மட்டுமல்லாமல் தன்னுடைய சர்வீஸ் துப்பாக்கியை கூட தனிநபரிடம் வழங்கி பணத்தைப் பெற்றுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் ஆந்திராவில் நடத்தப்பட்ட குரூப் 2 தேர்வு எழுதிய பானு பிரகாஷ் ரெட்டிக்கு அதில் வேலை கிடைத்தது. இதனால் அவர் அங்கு பணியில் சேர தற்போது பணியில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து வர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் இடம் சென்று தனது அனைத்து பொருட்களையும் ஒப்படைத்துள்ளார். இன்ஸ்பெக்டர் துப்பாக்கியை கேட்டபோது அவரது மேசையில் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை காணவில்லை தோட்டாக்கள் மட்டுமே இருப்பதாக கூறியுள்ளார்.
உடனே அதிகாரிகள் ஆய்வு செய்த போது சமீபத்திய வழக்கில் நீக்கப்பட்ட எட்டு சவரன் தங்கத்தை அவர் எடுத்துச் சென்று இருப்பதை சிசிடிவி கேமராவில் கண்டறிந்தனர். பிறகு விசாரித்ததில் தனது வேலைக்காக அடகு வைத்திருப்பதாக அவர் கூறினார். இதனால் இன்ஸ்பெக்டர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். பிறகு அதிரடி படை போலீசார் பானு பிரகாஷிடம் விசாரித்ததில் அவர் துப்பாக்கியை கூட அடகு வைத்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் துப்பாக்கியை பறிமுதல் செய்த நிலையில் அதிகாரிகள் சப் இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்துள்ளனர். மேலும் குற்றப்பாதையில் சென்று ஆன்லைன் சூதாட்டத்தால் கடலில் சிக்கி தங்கம் மற்றும் துப்பாக்கியை பணத்திற்காக தனியாரிடம் எஸ்ஐ அடகு வைத்த சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…