முதல் படத்தில் பின்புறத்தைப் பற்றி ஆபாசமாக கமெண்ட் அடித்த ஸ்டண்ட் மாஸ்டர்.. ஆனால் இன்னைக்கு அந்த நடிகையின் உயரமே வேற!

By vinoth

Published on:

சினிமா எப்போதுமே ஆண்கள் அதிகமாக கோலோச்சும் ஒரு தொழில். நடிகர்களில் இருந்து இயக்குனர், ஸ்டண்ட் மாஸ்டர், கேமரா மேன் என அனைத்து துறைகளிலும் ஆண்களே அங்கு மெஜாரிட்டியானவர்கள். அதனால் அங்கு பெண்களுக்கு சம ஊதியமோ மரியாதையோ கிடைப்பதில்லை.

அப்படிதான் உன்று உச்சத்தில் இருக்கும் நடிகை ஒருவர் தன்னுடைய முதல் படத்தில் நடித்த போது அந்த படத்தின் ஸ்டண்ட் மாஸ்டரால் அவமானப்படுத்தப்பட்டுள்ளார். அதுவும் உடல்ரீதியாக சிறுமை படுத்தும் விதமாக ஆபாசமாகக் கமெண்ட் செய்துள்ளார்.

   

அந்த படத்தில் ஒரு ஸ்டண்ட் காட்சியை எடுத்துள்ளனர். அப்போது ஹீரோவோடு அந்த ஹீரோயினும் இடம்பெற வேண்டிய காட்சி. அதற்கான முன்னேற்பாடுகளை ஸ்டண்ட் மாஸ்டர் செய்து கொண்டிருந்த போது ஹீரோயின் சென்று அவருக்கு வணக்கம் தெரிவித்துள்ளார். அவரை மேலும் கீழுமாக பார்த்த ஸ்டண்ட் மாஸ்டர் “நீதான் ஹீரோயினா.. என்ன பின்னாடி சதையே இல்ல… நீயெல்லாம் எப்படி ஹீரோயின் ஆன” என அத்தனைப் பேருக்கும் நடுவில் ஆபாசமாகப் பேசியுள்ளார்.

இந்த அவமானத்தை பொறுத்துக்கொண்டுதான் அந்த நடிகை அந்த படத்தில் நடித்தார். அந்த படம் சரியாக ஓடவில்லைதான். ஆனால் அதன் பிறகு அவர் நடித்த படம் தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் ரிலீஸாகி ஹிட்டடித்தது. அதனால் இரு மொழிகளிலும் முன்னணி நடிகையானார். அதன் பிறகு அந்த நடிகை தொட்டதெல்லாம் ஹிட்டானது.

இரு மொழிகளிலும் உச்ச நடிகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்தார். தமிழ், தெலுங்க்கு தாண்டி இந்தி மொழிக்கும் சென்றார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக இருக்கிறார், அவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் சில பிரச்சனைகள் வந்த போதும், அதை எதிர்கொண்டு எதிர்நீச்சல் போட்டு, இப்போது புதிய படங்களில் நடிக்க கமிட்டாகி வருகிறார். ஆனால் அவரை அப்படி ஆபாசமாக கமெண்ட் அடித்த ஸ்டண்ட் மாஸ்டர் போன இடம் தெரியவில்லை. இதுதான் சினிமா. இதுதான் வாழ்க்கை.