படிக்க வேண்டிய வயசுல இப்படியா…? “அந்தரங்க படங்கள்….” ஆசிரியர்களை மிரட்டிய மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

By Devi Ramu on மார்கழி 17, 2025

Spread the love

தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் அரசுப் பள்ளியில் பணிபுரியும் உதவி தலைமை ஆசிரியர் கனகராஜும்(43), கணித ஆசிரியை ஹேமாவும்(36) நெருக்கமாகப் பழகி வந்ததோடு, தங்கள் அலைபேசியில் அந்தரங்கப் படங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். இவர்களது ரகசியத்தைத் தெரிந்துகொண்ட அதே பள்ளியில் பயிற்சி ஆசிரியர்களாக இருந்த இரண்டு பி.எட் மாணவர்களான இனியவர்மன், கலைசாரதி ஆகியோர்  கனகராஜின் கைப்பேசியைத் திருடித் தங்களுக்கு 5 லட்ச ரூபாய் தராவிட்டால் படங்களை இணையத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளனர்.

இது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, மிரட்டல் விடுத்த மாணவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து அலைபேசியைப் பறிமுதல் செய்தனர். இந்த விவகாரம் கல்வித் துறை அதிகாரிகளின் கவனத்திற்குச் சென்றதை அடுத்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பேபி நேரடியாகப் பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில் ஆசிரியர்கள் இருவரும் அலைபேசி வாயிலாக ஆபாசப் படங்களைப் பரிமாறிக்கொண்டது உறுதி செய்யப்பட்டது.

   

இதனையடுத்து, பள்ளியின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் நடந்துகொண்ட உதவி தலைமை ஆசிரியர் மற்றும் கணித ஆசிரியை ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து கல்வித் துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது. மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஆசிரியர்களே இது போன்ற ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.