கௌஹாத்தி எய்ம்ஸ் (AIIMS) மருத்துவக் கல்லூரியில் உணவக உணவைச் சாப்பிட்ட 50-க்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ் மாணவர்கள், ஒரே நேரத்தில் உணவு நச்சுத்தன்மையால் (Food Poisoning) பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் உணவில் அடிக்கடி பூச்சிகள் மற்றும் தலைமுடி கிடப்பதாகவும், சமையல் கூடம் மிகவும் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாகவும் மாணவர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மருத்துவக் கல்வி நிறுவனத்திலேயே மாணவர்களின் உடல்நலம் இவ்வளவு அலட்சியமாகக் கையாளப்படுவது பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் இந்த அவலநிலை குறித்துப் புகார் அளித்தும், நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மாறாக, அதே உணவகத்தில் சாப்பிடுமாறு மாணவர்களைக் கட்டாயப்படுத்துவதாகவும், மீறினால் தேர்வெழுத அனுமதிக்க மாட்டோம் என நிர்வாகம் மிரட்டுவதாகவும் மாணவரின் தந்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை (FSSAI) உடனடியாகத் தலையிட்டு, மாணவர்களின் உயிருடன் விளையாடும் நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
🚨 URGENT : Food safety crisis at AIIMS Guwahati 🚨
My son, an MBBS student at AIIMS Guwahati, has suffered food poisoning along with more than 50 other students after eating mess food. This is not an isolated incident. Students frequently report insects and hair in meals, along… pic.twitter.com/Ub4E4j0h3s
— Sanemed (@drhimanshu256) May 1, 2026
