மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் பெண் ஆசிரியை ஒருவர் மாணவர்களால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த வீடியோவில், வகுப்பறையில் சில மாணவர்கள் ஒன்றுசேர்ந்து பெண் ஆசிரியரை இரக்கமின்றித் தாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த விவகாரம் கல்வித் துறையிலும் பொதுமக்களிடையேயும் கடும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.
இந்த கொடூரத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக உள்ளூர் காவல்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களை அடையாளம் காணும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போலீசார் உறுதியளித்துள்ளனர்.
https://twitter.com/Savit12/status/2091374749037527044/video/1
ஆசிரியர் மீது நடத்தப்பட்ட இந்த வன்முறைச் சம்பவத்திற்குப் பல்வேறு தரப்பினரும் தங்களது பலத்த கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், வகுப்பறைகளில் ஒழுக்கத்தைப் பேணவும் இத்தகைய குற்றங்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
