அசாம் மாநிலம் கௌஹாத்தி பல்கலைக்கழகத்தில் சமூகவியல் படித்து வந்த 21 வயதான மாணவி நிமிஷா தாகுரியா, கடந்த செப்டம்பர் 25 அன்று மாலை விடுதியில் தங்குவதாக வீட்டிடம் கூறிவிட்டு வெளியேறியுள்ளார். ஆனால், அவர் அஷிக் அலி (26) என்ற வாலிபருடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள ஒரு ஹோம்ஸ்டேயில் தங்கியுள்ளார். இந்நிலையில், அதிகாலை 2 மணியளவில் தாய்க்கு போன் செய்த நிமிஷா, “அம்மா… என்னைச் சிலர் தாக்கி மார்பில் குத்துகிறார்கள்” என அழுது கதறியுள்ளார்.
அதற்குள் அழைப்பு துண்டிக்கப்படவே, பதறிய பெற்றோர் போலிஸாரை அணுகினர். போலிஸார் செல்போன் டவர் இருப்பிடத்தை வைத்துத் தேடியபோது, கரால் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு பெண் மயங்கிய நிலையில் கிடப்பதாகத் தகவல் கிடைத்தது. பெற்றோர் அங்கு சென்று பார்த்தபோது, நிமிஷா பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். நிமிஷாவை அஷிக் அலி மற்றும் இரு இளைஞர்கள் அதிகாலை 4.30 மணிக்கு மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சேர்த்துள்ளனர்.
நிமிஷா தூக்கில் தொங்கித் தற்கொலை செய்துகொண்டதாக அஷிக் அலி கூறியபோதிலும், மாணவியின் உடலில் காயங்கள் இருப்பதை போலிஸார் கண்டறிந்துள்ளனர். இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலையில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டதால் விமான நிலையச் சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. போலிஸார் அஷிக் அலையைக் கைது செய்து, விதிமுறைகளை மீறி செயல்பட்ட ஹோம்ஸ்டேவை சீல் வைத்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
குஜராத் மாநிலத்தில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 35 வயது இளைஞரின் உறுப்புகளைத் தானம் செய்ய அவரது மனைவி முன்வந்ததன்…
உத்தராகண்ட் மாநிலத்தில் கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் இனோவா கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர்…
ராஜஸ்தான் மாநிலத்தில் தீவிரமடைந்து வந்த குடும்பக் கடன் சுமையை சமாளிப்பதற்காக, வீட்டில் வளர்த்து வந்த பசுவை விற்க கணவர் எடுத்த…
சீனாவில் 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகையே உலுக்கிய ஒன்றரை வயதுக் குழந்தை மீதான கொடூரத் தாக்குதல் சம்பவம் குறித்த விவரங்கள்…
பெங்களூரு யெலஹங்கா பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் செவ்வாய்க்கிழமை அன்று அதிர்ச்சியூட்டும் கொலைச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கேரள மாநிலத்தைச்…
பத்ராவதியின் நாகசேனா நகரில் பயிற்சி வகுப்பு முடிந்து மிதிவண்டியில் வீடு திரும்பிய 8 வயது சிறுவன் மீது, 17 வயது…