அதிர்ச்சி..! விஜய் வாகனத்தின் பின்னால் சென்று விபத்தில் சிக்கிய மாணவர் உயிரிழப்பு..!!

By Soundarya on பங்குனி 23, 2026

Spread the love

தஞ்சாவூரில் கடந்த மார்ச் 4-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்றபோது ஏற்பட்ட விபத்தில், திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் விக்னேஷ் இன்று (மார்ச் 23) பரிதாபமாக உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தில் சென்றபோது நிலைதடுமாறி விழுந்த அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

விபத்தைத் தொடர்ந்து திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விக்னேஷ், கடந்த 20 நாட்களாகத் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தது அவரது குடும்பத்தினர் மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.