டெல்லி சத்ய நிகேதான் பகுதியில் நிகழ்ந்த கட்டட விபத்தில் ஆர்பித் என்ற மாணவர் உயிரிழந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக டெல்லி காவல்துறை பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. இதில் கொலையாகாத குற்றத்திற்குரிய மரணத்தை விளைவித்தல், கட்டடங்கள் தொடர்பான அலட்சியப் போக்கு மற்றும் காயப்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த விபத்து வழக்கைக் காவல் ஆணையர் நேரடியாகக் கண்காணித்து வருகிறார். சம்பவத்திற்குப் பொறுப்பானவர்களைக் கண்டறிய டெல்லி காவல்துறையின் குற்றப் பிரிவு , சிறப்புப் பிரிவு, சிறப்புப் படை, ஏஏடிஎஸ் மற்றும் உள்ளூர் காவல்துறை உள்ளடக்கிய பல சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
விபத்துக்குள்ளான இந்தக் கட்டடத்தை ஹரி பன்சால் என்பவர் இயக்கி வந்ததாகக் கூறப்படுகிறது. இடிபாடுகளுக்குள் சிக்கிய மாணவர் ஆர்பித்தைக் காப்பாற்ற முயன்றும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கு விசாரணையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…