ஐயோ… பேச்சை கேட்கலனா போட்டோவை லீக் பண்ணிடுவேன்… முன்னாள் வகுப்பறை நண்பனின் தொடர் அச்சுறுத்தல்… கதறித் துடித்து மாணவி எடுத்த விபரீத முடிவு… பெங்களூரை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்…!

By Swetha on ஆவணி 23, 2026

Spread the love

பெங்களூரைச் சேர்ந்த 22 வயதான வாணி என்ற பெண், தனது முன்னாள் சக மாணவரான அபிஷேக் என்பவரின் தொடர் பிளாக்மெயில் மற்றும் பாலியல் தொந்தரவு காரணமாக ஆகரா ஏரியில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “அவன் எப்போது அழைத்தாலும் நான் அவனது அறைக்குச் செல்ல வேண்டியிருந்தது” என்று அவர் தனது கடைசி கடிதத்தில் மிகவும் மனவேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஒரு வருடமாக அபிஷேக், வாணியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்து அவரை மிரட்டி வந்துள்ளார். அவர் சொல்வதைக் கேட்காவிட்டால், அந்தப் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு அவரது குடும்பத்தின் மரியாதையைச் சீரழித்து விடுவதாக அச்சுறுத்தியுள்ளார். இந்தத் தொடர் மிரட்டல்களால் வாணி கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

   

தனது மரணத்திற்கு அபிஷேக்கே முழு முதல் காரணம் என்று வாணி எழுதிய தற்கொலை குறிப்பில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதத்தின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அபிஷேக்கைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.