கோயம்புத்தூர் மாவட்டம் காட்டூர் சட்டம்-ஒழுங்கு பிரிவைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார், நள்ளிரவில் காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே ரோந்து சென்ற போது, 19 வயது இளம் பெண் ஒருவர் தனியாக நின்று கொண்டிருந்ததைக் கண்டனர். அவரிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததால், போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து, போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், அவர் சேலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி என்பது தெரியவந்தது. செல்போனில் அதிக நேரம் பேசியதற்காகப் பெற்றோர் திட்டியதால் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டுப் புறப்பட்டு கோவைக்கு வந்ததாகவும், கையில் பணம் இல்லாததால் எங்குச் செல்வது என்று தெரியாமல் தவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து போலீசார், அந்த மாணவியைக் கவுண்டம்பாளையத்தில் உள்ள பெண்கள் காப்பகத்தில் பாதுகாப்பாகத் தங்க வைத்தனர். இதுகுறித்த தகவலறிந்த மாணவியின் பெற்றோர் விரைந்து வந்தவுடன், போலீசார் மாணவியை அவர்களுடன் பத்திரமாக அனுப்பி வைத்தனர். மேலும், மாணவி தனது படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்றும், வீட்டைவிட்டு வெளியேறுவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்றும் போலீசார் அறிவுரை வழங்கினர்.
ஆந்திரப் பிரதேசத்தில் மக்கள் தொகையை ஊக்குவிக்கும் வகையில், கூடுதல் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர்…
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண்மணிக்கு, எந்தவித அறுவைசிகிச்சையும் இன்றி இயற்கையான முறையில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன.…
கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பதற்காகத் தமிழக முதல்வர் விஜய் புதிய அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி,…
ஐபிஎல் 2026 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் போது,…
குஜராத்தில் நான்கு மாத வாடகை பாக்கியைச் செலுத்த முடியாமல், அதற்குப் பதிலாகத் தன் மனைவி மற்றும் மகளைப் பாலியல் துன்புறுத்தல்…
மத்திய தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம் , சந்தாதாரர்கள் தங்களின் அவசரத் தேவைகளுக்காக பிஎஃப் கணக்கிலிருந்து முன்பணம் எடுப்பதற்கான ஆட்டோ…