வகுப்பறையில் மாணவன் ஒருவன் சக மாணவனை அதிவேகமாகக் கத்தியால் குத்திய விவகாரத்தில், தாக்குதலின் வேகம் காரணமாக ஆரம்பத்தில் தான் குத்தப்பட்டதே தெரியாமல் நின்ற மாணவன், சிறிது நேரத்திற்குப் பிறகு ஆடைகளில் இருந்து ரத்தம் கசிந்து சுதாரித்துக்கொள்ளும் பதைபதைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமூக வலைதளப் பக்கத்தில் இடப்பட்ட ஒரு சாதாரண கமெண்ட் காரணமாக ஏற்பட்ட முன்விரோதமே இந்த கொடூரத் தாக்குதலுக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. பல ஆண்டுகளாக மனதில் வைக்கப்பட்டிருந்த ஆத்திரத்தால் வகுப்பறையிலேயே அரங்கேறிய இந்தத் தாக்குதல் சம்பவம் உலகளவில் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இணைய விவாதங்கள் மற்றும் வன்முறை மனப்பான்மை குறித்து பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
