“அலறிய மாணவர்கள்… இடைவிடாமல் கேட்ட துப்பாக்கி சத்தம்…” வாரணாசியில் அரங்கேறிய பயங்கரம்… பதற வைக்கும் திக் திக் வீடியோ..!!

By Devi Ramu on பங்குனி 21, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள உதய் பிரதாப் கல்லூரியில், 23 வயதான சூர்ய பிரதாப் சிங் என்ற பி.எஸ்சி மாணவர் பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்கு பயந்து அந்த மாணவர் ஓடுவதும், பின்னால் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்பதுமான பதறவைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இக்கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து சக மாணவர்கள் அலறியடித்து ஓடியதால் வளாகம் முழுவதும் அச்சம் நிலவியது.

இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டது மன்ஜீத் என்ற இரண்டாம் ஆண்டு கலைப்பிரிவு மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இடையே நிலவிய தனிப்பட்ட முன்விரோதம் காரணமாகவே இந்தக் கொலை நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தப்பியோடிய கொலையாளியைப் பிடிக்க காவல்துறை சார்பில் ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.