உச்சக்கட்ட பரபரப்பு…. 100+ கல்லூரிகளுக்குக் காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு… கோவை மாணவர் கொலையால் வந்த மாற்றம்….!

Spread the love

கோவை தனியார் கல்லூரியில் படித்து வந்த மாணவர் அமுதன், போதைப்பொருள் கும்பல் தொடர்பாக புகார் தெரிவித்ததால் 20 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதாக அவரது பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். காவல்துறையினர் வேறு காரணங்களைக் குறிப்பிட்டாலும், கோவை கல்வி நிறுவனங்களில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருவது கசப்பான உண்மையாக உருவெடுத்துள்ளது. அடுத்தடுத்து நடைபெறும் இத்தகைய குற்றச் சம்பவங்கள் பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே பெரும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளன.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, கோவை கொடிசியா வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட தனியார் கல்லூரி நிர்வாகிகளுடன் காவல்துறை உயரதிகாரிகள் அவசர ஆலோசனை மேற்கொண்டனர். கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன், மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யா பாரதி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி ஆகியோர் பங்கேற்ற இக்கூட்டத்தில், மாணவர்களின் பாதுகாப்பையும் ஒழுங்கையும் உறுதிசெய்ய பல்வேறு கடுமையான உத்தரவுகள் கல்லூரி நிர்வாகங்களுக்கு வழங்கப்பட்டன.

மாணவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க ஒவ்வொரு கல்லூரியிலும் சைபர் பிரிவு தொடங்கப்பட்டு, அவர்களின் சமூக வலைதள செயல்பாடுகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், கல்லூரி வளாகங்கள், விடுதிகளின் நுழைவு வாயில்கள் ஆகியவற்றில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்திப் பராமரிப்பதுடன், பறக்கும் படைகள் மூலம் தனியார் மற்றும் கல்லூரி விடுதிகளில் திடீர் சோதனைகளை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மாணவர்களின் ஒழுக்கத்தைக் கண்காணிக்கத் தனி மென்டார்கள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை குழுக்களை அமைக்கவும், மனநல ஆலோசகர்கள் மூலம் உரிய ஆலோசனைகளை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்டம், சைபர் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டில் மாணவர்கள் ஈடுபடுகின்றனரா என்பதைத் தொடர்ந்து கண்காணித்து, அதுகுறித்த விவரங்களை மாதந்தோறும் நடைபெறும் காவல்துறை ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும், பெற்றோர்களுக்கு மாணவர்களின் செயல்பாடு குறித்து உடனுக்குடன் தகவல் அனுப்ப வேண்டும் என்றும் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

Nanthini

Recent Posts

தனித்தனி அறையில் தூங்க சென்ற தம்பதி…. 5 வயது மகனும், தந்தையும்…. விடிந்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கணவன் மற்றும் 5 வயது மகன் ஆகிய இருவர் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்து…

4 minutes ago

ஐயோ நாங்க இப்படி ஆகும் நினைக்கல..! 3-வது மாடியில் விளையாடிய 2 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்… தீவிர சிகிச்சைப் பிரிவில் பரிதாபம்…!!

பெங்களூருவின் சிக்கா அடுகோடி பகுதியில், குடியிருப்பின் மூன்றாம் மாடி அமைப்பில் உள்ள கிரில்லில் ஏறி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன்…

4 minutes ago

போலீஸ் தாக்குதலா? உடல்நலக் குறைவா?… போலீஸ் ஸ்டேஷன் சென்று திரும்பிய பூசாரி திடீர் மரணம்… குடும்பத்தினர் பரபரப்பு குற்றச்சாட்டு…!!

மதுரை மேலஅனுப்பானடியைச் சேர்ந்த கோவில் பூசாரி பரமசிவம், வாகனங்கள் நிறுத்துவது தொடர்பான இருதரப்பு மோதல் வழக்கில் சிந்தாமணி காவல் நிலைய…

16 minutes ago

“என்னை ரொம்ப டார்ச்சர் பண்றாங்க”… தோழிகளுக்கு கதறி அழுது ஆடியோ அனுப்பிவிட்டு மாணவி எடுத்த விபரீத முடிவு… கல்லூரியில் நிகழ்ந்த கோர சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் செயல்படும் தனியார் செவிலியர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்த கேரளாவைச் சேர்ந்த மாணவி…

25 minutes ago

கெஞ்சிய கர்ப்பிணி பெண்…. நள்ளிரவில் கொடூரமாக கொன்ற 21 வயது காதலன்… விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

ஐதராபாத் நகரம் பாலாப்பூர் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் பணியாற்றி வந்த இளம் பெண்…

30 minutes ago

திடுக்கிடும் திருப்பம்..! கண்மாயில் கொடூர சம்பவம்… போலீசாரையே குழப்பும் மர்மக் கொலை… நடுங்க வைக்கும் பின்னணி…!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த கீழடி கிராமத்தில் உள்ள கொந்தகை கண்மாயில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத…

34 minutes ago