“இப்படி கூட கொலை பண்ண முடியுமா?”… காதலனை முன்னாள் காதலனுடன் சேர்ந்து கொன்ற மாணவி… கொலையை மறைக்க சினிமா ஸ்டைல் திட்டம்… அதிர்ந்து போன போலீசார்…!

Spread the love

டெல்லியில் ஐஏஎஸ் தேர்வுக்காக தயாராகி வந்த ஒரு வாலிபரை அவருடன் சேர்ந்து வாழ்ந்த லிவ் இன் பார்ட்னர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காந்தி விகாரில் வசித்து வந்த ராம் கேஷ் மீனா (32) என்ற அந்த வாலிபர் கடந்த வாரம் அவரது பிளாட்டில் ஏற்பட்ட கேஸ் சிலிண்டர் விபத்தில் உடல் கருகி உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். முதலில் இது விபத்து என்று போலீசார் நினைத்த நிலையில் பிறகு அந்த வாலிபரின் குடும்பத்தார் அளித்த புகாரைத் தொடர்ந்து இது பயங்கர கொலை என்று போலீசார் கண்டுபிடித்தனர்.

இந்த கொலை தொடர்பாக அவருடைய லிங் இன் பார்ட்னராக இருந்த அம்ரிதா (21) மற்றும் அந்தப் பெண்ணின் முன்னாள் காதலன் சுமித் காஷ்யப் (27) மற்றும் சுமித் நண்பன் சந்திப்பாகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் ராம் கேஷ், அம்ரிதாவின் சில பிரைவேட் வீடியோ மற்றும் புகைப்படங்களை ஒரு ஹார்ட் டிஸ்கில் சேமித்து வைத்ததாகவும் அதை டெலிட் செய்ய மறுத்ததால் தான் இந்த கொலையை செய்ய முடிவெடுத்ததாகவும் அந்த பெண் போலீசில் கூறியுள்ளார். அம்ரிதா தடை அறிவியல் படித்து வந்ததால் Crime web series பார்ப்பதில் அவருக்கு அதிக ஆர்வம்.

இதனால் கொலையை மறைப்பதற்கு ஒரு சினிமா ஸ்டைல் திட்டத்தை அவர் தீட்டி உள்ளார். அதாவது கொலை நடப்பதற்கு முந்தைய நாள் இரவு ஸ்மித் மற்றும் சந்திப் ஆகியோருடன் ராம்கேஷ் வசித்து வரும் பிளாட்டுக்கு அம்ரிதா சென்றுள்ளார். அங்கு ராமை பயங்கரமாக தாக்கி பிறகு கழுத்தை நிறைத்து கொலை செய்துள்ளனர். கொலை செய்த பிறகு அவருடைய உடலை எரித்து ஆக்சிடென்ட் போல காட்ட ஒரு வினோதமான முறையை கையாண்டனர். ராம்கேஷ் உடல் மீது எண்ணெய், நெய், மதுபானம் ஆகியவற்றை ஊட்டியுள்ளனர்.

பிறகு சமையலறையில் இருந்த கேஸ் சிலிண்டரை எடுத்து வந்து அவருடைய தலையின் அருகே வைத்து அதன் ரெகுலேட்டர் வால்வை திறந்து விட்டு லைட்டர் மூலமாக தீ மூட்டி விட்டு அங்கிருந்த தப்பிச் சென்று விட்டனர். சுமார் ஒரு மணி நேரம் கழித்து சிலிண்டர் வெடித்ததால் ராம்கேஷின் உடல் முழுவதும் கருகி இது ஒரு விபத்து என்று பலரும் நம்பியுள்ளனர். ஆனால் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சியில் இவர்கள் நடத்திய நாடகம் பதிவாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து மூன்று பேரையும் கைது செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள் .

Nanthini

Recent Posts

சுக்குநூறாக நொறுங்கிய லாரிகள்… துடித்துடித்து பலியான டிரைவர்கள்… கோர விபத்து…!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…

8 மணத்தியாலங்கள் ago

70 ஆண்டுகால மர்மம் முடிவுக்கு வருகிறது..! ஏலியன்கள் இருப்பது உண்மையா..? பொய்யா..? ரகசியங்களை உடைக்கப்போகும் ட்ரம்ப்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…

8 மணத்தியாலங்கள் ago

BREAKING : என்கிட்ட மோதாதே… வம்புக்கு இழுக்காதே… எதிர்கட்சியினரை அலறவிட்ட ஸ்டாலின்..!!

திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…

8 மணத்தியாலங்கள் ago

“என் அம்மா எனக்கு வேணும்” விபத்தில் உயிர் தப்பிய குழந்தை தாயை தேடி அழுத காட்சி.. ஒரே நாளில் மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்த கொடூரம்..!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…

8 மணத்தியாலங்கள் ago

ஆண்களுக்கு அதிர்ச்சி, பெண்களுக்கு மகிழ்ச்சி…! மெனு-வில் இப்படியொரு ரகசியமா…? இளம்பெண் கொடுத்த ‘Men+U’ விளக்கம் சிரிப்பலைகளில் இணையம்…!

சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…

8 மணத்தியாலங்கள் ago

“அம்மா என்னை விட்டுடுங்க” பள்ளிக்கு அனுப்பக் கதவைத் தட்டிய குடும்பத்தினர்… வீட்டுக்குள் காத்திருந்த பயங்கர அதிர்ச்சி… பெற்ற தாயே செய்த் கொடூரம்…!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…

9 மணத்தியாலங்கள் ago