“அம்மா நோட்ஸ் வாங்கிட்டு உடனே வர்றேன்…” தோழியுடன் ஸ்கூட்டியில் சென்ற மாணவி…. லாரி மோதி சக்கரத்தில் சிக்கி பலியான சோகம்… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

By Devi Ramu on ஐப்பசி 1, 2026

Spread the love

கர்நாடக மாநிலம் ஹாசன் தாலுகா அலுவலகம் அருகே, 14 சக்கரங்கள் கொண்ட ராட்சத லாரி ஏறி இறங்கியதில், 18 வயதான மேல்நிலைப்பள்ளி மாணவி சம்பவ இடத்திலேயே கொடூரமாகப் பலியான சம்பவம் பெரும் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஹாசன் பகுதியைச் சேர்ந்த லிகிதா (18) என்ற மாணவி, தனது தாயாரிடம் “அம்மா, வகுப்புச் குறிப்புகளை வாங்கிக்கொண்டு, விநாயகரையும் தரிசனம் செய்துவிட்டு உடனே வருகிறேன்” எனக் கூறிவிட்டுத் தனது தோழி சின்மயியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

விநாயகர் தரிசன முடித்துவிட்டு இருவரும் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, என்.ஆர். சர்க்கிள் பகுதியிலிருந்து வந்த 14 சக்கரங்கள் கொண்ட ராட்சத லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக இவர்களது இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த கொடூர மோதலில் இருசக்கர வாகனத்திலிருந்து இருவரும் கீழே தூக்கி வீசப்பட்டனர்.

   

இதில் மாணவி லிகிதா லாரியின் சக்கரங்களில் சிக்கி, சாலையில் இழுத்துச் செல்லப்பட்டு உடல் நசுங்கிச் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த அவரது தோழி சின்மயி தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். பட்டப்பகலில் நகரத்தின் மையப் பகுதிக்குள் இதுபோன்ற ராட்சத லாரிகள் நுழைய அனுமதி அளித்த அதிகாரிகளின் அலட்சியமே இந்த விபத்திற்குக் காரணம் எனக் கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.