உஷார்! நீங்களும் லேப்டாப்பை சார்ஜ் போட்டுட்டு தூங்குறீங்களா?… 15 வயது மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்… கண்ணீரில் தவிக்கும் பெற்றோர்…!!

By Gayathri on ஆவணி 16, 2026

Spread the love

திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த 15 வயதான சீனிவாசன் என்ற பதினோராம் வகுப்பு மாணவன், தனது மடிக்கணினிக்கு சார்ஜ் போட்டபடியே அதன் அருகில் உறங்கியுள்ளார். நள்ளிரவில் எதிர்பாராதவிதமாக மின்னிணைப்பில் இருந்த சார்ஜர் வயர் மீது அவரது கை பட்டதில் பலத்த மின்சாரம் பாய்ந்துள்ளது. உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து, மாணவரின் உடல் உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சமீப காலங்களில் மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்யும் போது ஏற்படும் மின்கசிவு விபத்துகளும், அதனால் நிகழும் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், மணவாள நகர் காவல் நிலைய போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மின்சாதனங்களை சார்ஜில் விட்டுவிட்டு அதன் அருகிலேயே உறங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் எச்சரிக்கையாக உணர்த்தியுள்ளது.