கன்னியாகுமரி மாவட்டம் பர்னட்டிவிளையை சேர்ந்த நாகராஜன் என்பவர் சுங்கவரி துறையில் ஏட்டாக பணியாற்றி வருகின்றார். இவருக்கு 17 வயதில் சக்தீஸ்வர் என்ற மகன் உள்ள நிலையில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று இன்ஜினியரிங் கல்லூரியில் சேர தயாராகி வந்தார். இப்படியான நிலையில் மாணவர் நேற்று வீட்டில் திடீரென மூச்சு திணறி மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார். இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெற்றோரிடம் விசாரணை நடத்திய நிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. அதாவது மாணவன் உடல் பருமனால் அவதி உற்று வந்த நிலையில் தற்போது மேற்படிப்புக்காக கல்லூரிக்கு செல்ல இருந்ததால் உடல் பருமனை பார்த்து சக மாணவர்கள் கேலி கிண்டல் செய்யலாம் என்று நினைத்துள்ளார்.
இதனால் உடல் எடையை குறைக்கும் வழிமுறைகளை youtube-யில் தேடிப் பார்த்துள்ளார். அதில் கிடைத்த தகவலின் படி கடுமையான உணவு கட்டுப்பாடுகளை அவர் கடைபிடித்து வந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களாக திட உணவு எதுவும் சாப்பிடாமல் பழச்சாறு மட்டுமே குடித்து உடற்பயிற்சி செய்து வந்துள்ளார். தொடர்ந்து பழச்சாறு குடித்து வந்ததால் சளி தொல்லைக்கு ஆளாகி மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து மாணவன் உயிரிழந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…