சென்னை அருகே குன்றத்தூரில் மாணவர் ஒருவர் திடீரென பள்ளியிலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியயையும் ஏற்படுத்தியுள்ளது. குன்றத்தூரில் அரசுப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்த மாணவன் வெங்கடேஷ் (16). இந்நிலையில் இவர் சம்பவத்தன்று வகுப்பறையில் மயங்கி விழுந்துள்ளான்.
இதனையடுத்து, அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் அவரை ஹாஸ்பிடலில் சிகிச்சைக்காக அனுமதிதுள்ளார்கள். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவனது உயிர்பிரிந்தது. இதனையடுத்து காலாண்டு விடுமுறையில் அதிக நேரம் செல்போனில் கேம் விளையாடியதே இறப்புக்கு காரணம் என அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
