“எங்கள் ஆசைக்கு ஒத்துழைக்காவிட்டால்” தினம் தினம் ஆபாச வீடியோ… தொல்லை கொடுத்த 2 பேராசிரியைகள்… கல்லூரி மாணவன் எடுத்த அதிர்ச்சி முடிவு..!!

By Soundarya on கார்த்திகை 3, 2025

Spread the love

விசாகப்பட்டினம் எம்.பி.வி காலனியை சேர்ந்தவர் சூரி பாபு. ஆட்டோ டிரைவர் ஆன இவருடைய மூத்த மகன் சாய் தேஜா. 22 வயதான இவர் தனியார் கல்லூரி ஒன்றில் இறுதி வருடம் படித்து வந்துள்ளார். இவர் மற்ற மாணவர்களோடு போட்டி போட்டு படிப்பில் கவனம் செலுத்தி வந்துள்ளார். வகுப்பில் சாய் தேஜா முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவராக இருந்துள்ள நிலையில் புள்ளியல் துறை பேராசிரியர் ஒருவரும் வகுப்பு பேராசிரியை ஒருவரும் சாய் தேஜாவை தங்களுடைய ஆசைக்கு இணங்குமாறு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது .தங்களுடைய ஆசைக்கு இணங்க மறுத்தால் செய்முறை தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் வழங்குவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளார்கள்.

பேராசிரியர்கள் இரண்டு பேரும் சாய் தேஜாவின் whatsapp எண்ணிற்கு ஆபாச ஃபோட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் அனுப்பி உள்ளார்கள் . இது குறித்து சாய் தேஜா தன்னுடைய பெற்றோரிடம் கூறிய நிலையில் சாய் தேஜாவின் தந்தையும், மாமாவும் கல்லூரிக்கு வந்து கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார்கள். இதற்கிடையில் இதை அறிந்த பேராசிரியை வீட்டில் இருந்து சாய் தேஜாவுக்கு செல்போனில் மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் பயந்து போன சாய் தேஜா செல்போனில் ஆடியோ பதிவிட்டு பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அடுத்து போலீசார் சாய் தேஜாவின் செல்போனை பறிமுதல் செய்துள்ளார்கள். பேராசிரியர்கள் மாணவருக்கு அனுப்பி ஆபாச பாடங்கள் வீடியோக்களை பார்த்து அதிர்ச்சி அடைந்து இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.