FLASH: கர்நாடக அரசின் செயலுக்கு கடும் எதிர்ப்பு.. சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு..!!

By Soundarya on ஆனி 19, 2026

Spread the love

மேகதாது அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் செயலுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்வதாக தமிழக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். இன்று ஜூன் 19 அன்று நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் மேகதாது அணை விவகாரம் குறித்துத் தனித்தீர்மானம் கொண்டு வந்து பேசிய அவர், காவிரி என்பது இரு மாநிலங்களின் வாழ்வாதார உரிமைப் பிரச்சினை என்றும், இதில் கர்நாடக அரசின் ஒருதலைப்பட்சமான மேகதாது அணை திட்டத்திற்கு மத்திய அரசு எக்காரணம் கொண்டும் அனுமதி வழங்கக் கூடாது என்றும் திட்டவட்டமாக வலியுறுத்தினார்.

மேலும், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த விவசாயிகளின் நலன் மற்றும் மாநிலத்தின் நீர் உரிமையைப் பாதுகாக்கும் இந்த முக்கிய விவகாரத்தில், அரசியல் எல்லைகளைக் கடந்து தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரண்டு நிற்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் பேரவையில் அழைப்பு விடுத்துள்ளார். கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளையும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளையும் மீறி அணை கட்ட முற்படுவதை சட்டப்பூர்வமாகவும், அரசியல் ரீதியாகவும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலுவாக எதிர்க்கும் என்பதை இந்தத் தனித்தீர்மானத்தின் மூலம் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.