தெருவில் நடந்து சென்ற தம்பதியை ஓட ஓட விரட்டி கடித்த தெருநாய்கள்… நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சிகள்..!!

By Soundarya on மார்கழி 21, 2025

Spread the love
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கடந்த டிசம்பர் 18-ஆம் தேதி நடைபெற்ற தெருநாய் தாக்குதல் குறித்த சிசிடிவி   காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜோத்பூரில் உள்ள ஒரு தெருவில் தம்பதியினர் இருவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கிருந்த தெருநாய்கள் கூட்டம் திடீரென அவர்களை நோக்கி ஆக்ரோஷமாகப் பாய்ந்துள்ளன.

<

/div>

பல்வேறு திசைகளிலிருந்து வந்த நாய்கள் அந்தத் தம்பதியைச் சூழ்ந்து கடித்ததில், இருவரும் நிலைதடுமாறி தரையில் விழுந்தனர். கீழே விழுந்த பின்னரும் நாய்கள் அவர்களை விடாமல் கடித்து இழுத்த கொடூரமான காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன. இந்தத் தாக்குதலில் தம்பதியினர் பலத்த காயமடைந்த நிலையில், அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து நாய்களை விரட்டி அவர்களை மீட்டுள்ளனர்.