தெலுங்கானா மாநிலம் ஜட்சர்லா அரசு மருத்துவமனை பிணவறையில், பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த நாகசாலாவைச் சேர்ந்த பீமேஸ்வர் (32) என்ற வாலிபரின் உடலைத் தெருநாய்கள் கடித்துக் குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குளத்தில் விழுந்து உயிரிழந்தவரது உடல், முறையான பாதுகாப்பின்றி பிணவறையின் தரையில் வைக்கப்பட்டிருந்ததால் இந்த அவலம் நிகழ்ந்துள்ளது.
உடலின் சிதைந்த நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், மருத்துவமனை நிர்வாகத்தின் மெத்தனப் போக்கை கண்டித்து மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடல்களைப் பராமரிப்பதில் அலட்சியமாகச் செயல்பட்ட ஊழியர்கள் மீது கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன. சம்பவம் குறித்து மாவட்ட மருத்துவ அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதோடு, பணியில் கவனக்குறைவாக இருந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளனர்.
