வடோதராவின் பஜ்வா பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த தாயையும், சிறிய மிதிவண்டியில் வந்த அவருடைய சிறுவனையும் ஒரு தெருப்பசு திடீரென தாக்கியது. அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான இச்சம்பவத்தின் அதிர்ச்சியளிக்கும் காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன. மாடு தாக்கியதில் காயமடைந்த இருவருமே உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாய் தனது மகனுடன் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மாடு பாய்ந்து வந்து தாக்கியதில் சிறுவன் கீழே விழுந்தான். அவனைக் காப்பாற்றத் தாய் உடனடியாக குறுக்கே வந்து தன் குழந்தையைப் பாதுகாக்க முயன்றபோது, அவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இக்கட்டான சூழ்நிலையைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக ஓடிவந்து பசுவை விரட்டி அடித்து, தாய் மற்றும் சேயை மீட்டு உதவியுள்ளனர்.
https://twitter.com/nextminutenews7/status/2097189026008830302/video/1
பஜ்வா பகுதியில் தெருமாடுகளின் தொல்லை தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறும் அப்பகுதி மக்கள், இதனால் கடும் வேதனை அடைந்துள்ளனர். குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அதிகளவில் நடமாடும் குடியிருப்புப் பகுதிகளிலும் முக்கியச் சாலைகளிலும் சுற்றித்திரியும் விலங்குகளை உடனடியாகக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
