அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை (இபிஎஸ்) பதவியிறக்கம் செய்ய கட்சியின் விதிகளப் பயன்படுத்தி பொதுக்குழுவைக் கூட்ட எஸ்பி.வேலுமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் ஆகியோர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கட்சியின் பொதுக்குழுவைக் கூட்ட 1/5 பங்கு உறுப்பினர்கள் கோரினாலே போதும் என்ற நிலையில், தங்களது தரப்பில் 2/5 பங்கு உறுப்பினர்களின் கையெழுத்து ஆதரவு இருப்பதாக விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் இணைத்து அதிமுகவை மீட்பதற்காகவே இந்த புதிய வியூகம் வகுக்கப்பட்டுள்ளதாக அதிருப்தியாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் அதிமுக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
