பாகுபலி, பாகுபலி 2, RRR போன்ற திரைப்படங்களை இயக்கியதன் மூலம், இயக்குநர் ராஜமௌலி இந்திய அளவில் பெரும் புகழ் பெற்றார். இவரது படங்கள் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி அதிக வசூலைக் குவித்தன. தற்போது அவர், நடிகர் மகேஷ்பாபுவை வைத்து பிரம்மாண்டமான வாரணாசி என்ற புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
பல மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தின் பட்ஜெட் ரூ. 800 கோடி முதல் ரூ. 1200 கோடி வரை இருக்கும் எனத் தெரிகிறது. சமீபத்தில் வெளியான இதன் டைட்டில் டீசரில், ராமாயண யுத்தம் நடந்த காலத்தைக் குறிக்கும் காட்சிகள் இருந்ததால், கதை டைம் லூப் பாணியிலோ அல்லது ராமாயணத்துடன் தொடர்புடையதாகவோ இருக்கலாம் என ரசிகர்கள் கருதினர்.
தற்போது கசிந்துள்ள தகவலின்படி, இந்தக் கதை பல ஜென்மங்களுக்கு முன் ராமனாக இருக்கும் மகேஷ் பாபு, பல ஜென்மங்கள் கழித்து மனிதனாகப் பிறந்து சிவனாக அவதாரம் எடுப்பது போலவும் ராஜமௌலி கதையை அமைத்துள்ளாராம். டீசரில் மகேஷ்பாபு சூலாயுதம் ஏந்தி காளை மாட்டில் வருவது போன்ற காட்சிகள் இதற்குச் சான்றாக இருக்கின்றன.
மேலும், ராமனாக இருந்த மகேஷ்பாபுவைத் தாக்க, ராவணனாக இருந்த பிருத்விராஜ் மறு ஜென்மம் எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. சமீப காலமாக ஆன்மீகக் கருப்பொருளில் வெளியாகும் பெரிய பட்ஜெட் படங்கள் அதிக வசூலைக் குவிப்பதால், ‘வாரணாசி’ திரைப்படம் ரூ. 2000 கோடி வசூலைப் பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2026 தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி, மாநில அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியுள்ளன. நடிகர் விஜய் தலைமையிலான…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பர்கி அணையில் நிகழ்ந்த ஒரு கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.…
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் வகையில், நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றி கழகம்' (தவெக) 108…
சென்னையில் பாதுகாப்புப் பணியில் (Security Guard) ஈடுபட்டுள்ள பிகி நந்தி (Biki Nandi) என்ற இளைஞரின் வியக்கத்தக்க வளர்ச்சி குறித்த…
2026 தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள், தமிழக அரசியலின் நீண்டகால தர்க்கங்களை உடைத்தெறிந்து ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கியுள்ளன. தமிழக…
திமுகவின் அசைக்க முடியாத இரும்புக்கோட்டையாகக் கருதப்பட்ட சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்கள், இந்தத் தேர்தலில் கடும் சரிவைச் சந்தித்திருப்பது…