சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் கங்குவா. இப்படத்தில் திஷா பாட்னி, பாபி டியோல் என நட்சத்திர பட்டாளமே நடிக்க உள்ளனர். இந்தப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து உள்ளார். படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்றது வருகிறது. இது வரலாற்று படமாகவும் நிகழ்காலத்திலும் நடக்கும் கதையாக அமைந்து உள்ளது.
சமீபத்தில் கூட அமேசான் பிரைம் நிறுவனம் பல கோடி கொடுத்து இப்போதே வாங்கியுள்ளனர். கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் சாட்டிலைட் ரைட்ஸ் விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கங்குவா படத்தின் கதை இதுதான் என் ஒரு செய்தி வெளியாகி உள்ளது. இந்தப்படம் வரலாறும், நிகழ்காலமும் சேர்ந்து உருவாகிறது என நமக்கு தெரியும். ஆனால் இது ஒரு டைம் டிராவல் கதை என கூறப்படுகிறது.
ஆம், டைம் ட்ராவல் கதைக்களத்தில் தான் கங்குவா படம் உருவாகி இருக்கிறதாம். 1700ஆம் நூற்றாண்டில் வாழும் ஹீரோ சூர்யா, டைம் ட்ராவல் செய்து 2023ஆம் ஆண்டு வருகிறாராம். 1700ல் முடிக்க முடியாத சில காரியங்களை அவர் எப்படி தற்போது முடிக்கிறார் என்பதே இப்படத்தின் கதை என கூறி வருகிறார்கள். இது 24 படத்தின் சாயலில் இருப்பதாகவும் கொஞ்சம் ஏழாம் அறிவு போல் இருப்பதாகவும் சூர்யா ரசிகர்களே கமெண்ட் செய்து வருகிறார்கள்.