விறகுகடை முதலாளி To தளபதி விஜயின் வலது கை… யார் இந்த புஸ்ஸி ஆனந்த்…?

Spread the love

நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான நடிகர் விஜயின் வலது கையாக இருப்பவர்தான் புஸ்ஸி ஆனந்த். இவரை தெரியாதவர் யாரும் இருக்க வாய்ப்பில்லை. இவர் சொல்வதைத்தான் விஜய் கேட்பார் என்ற அளவுக்கு புகழ் பெற்றவர் புஸ்ஸி ஆனந்த். ஒரு சாதாரண விறகு கடை வைத்து நடத்தி வந்த புஸ்ஸி ஆனந்த் எப்படி இன்று தளபதி விஜய்க்கு அறிவுரை கூறும் வலது கையாக ஆனார் என்பதை பற்றி இனி காண்போம்.

சமீபத்திய காலங்களில் நடிகர் விஜய் அரசியல் பணிகளில் இறங்கி பணியாற்றி வருகிறார். தனது கட்சியை வளர்ப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி வந்தார் நடிகர் விஜய். அப்படி அவர் கலந்து கொள்ளும் பொது நிகழ்ச்சிகளில் அனைத்திலும் விஜய்க்கு பக்கத்தில் புஸ்ஸி ஆனந்த் கண்டிப்பாக இருப்பார். அதன் மூலம் தற்போது சமீபத்திய காலங்களில் பிரபலமான நபராக இருந்து வருகிறார் புஸ்ஸி ஆனந்த். புதுச்சேரியைச் சேர்ந்தவர் புஸ்ஸி ஆனந்த். புதுச்சேரியின் முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் பிரமுகர்மான அஷ்ரப்பின் உதவியாளர், ரியல் எஸ்டேட் அதிபர் மற்றும் விறகு கடை ஒன்றும் நடத்தி வந்துள்ளார் புஸ்ஸி ஆனந்த்.

பின்னர் புதுச்சேரியில் எம்எல்ஏ ஆக வேண்டுமென்ற ஆசையில் புஸ்ஸி தொகுதியை தேர்ந்தெடுத்து புதுவை மாநில காங்கிரஸ் சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். சுமார் 5000 ஓட்டுகள் அடங்கிய அந்த தொகுதியில் 2500 ஓட்டுகள் வாங்கி புஸ்ஸி ஆனந்த் வெற்றி பெற்றார். அதன் பிறகு இரண்டு முறை தேர்தலில் போட்டியிடும் புஸ்ஸி ஆனந்த் தோல்வியை தழுவினார்.

அதன் பிறகு முன்னாள் எம்எல்ஏ என்ற அந்தஸ்துடன் புஸ்ஸி ஆனந்த் விஜய் ரசிகர் மன்றங்களை கொண்டு பல உதவிகளை செய்து வந்துள்ளார். பின்னர் விஜயின் ரசிகர் மன்றத்தின் கிளை தலைவர் என்ற பொறுப்பை ஏற்றார். புதுச்சேரிக்கு எஸ் ஏ சந்திரசேகர் வந்த போதெல்லாம் அவருக்கு வேண்டிய வேலை செய்து கொடுத்து அவரின் மூலமாக நடிகர் விஜயை சந்தித்தார் புஸ்ஸி ஆனந்த்.

விஜயின் நட்பை ஏற்படுத்திக் கொண்ட புஸ்ஸி ஆனந்த் அவர்களுக்கு விஜய் ரசிகர் மன்றத்தின் தலைவர் என்ற பொறுப்பை விஜயின் அப்பா சந்திரசேகர் வாங்கி கொடுத்தார். அதற்குப் பிறகு நடிகர் விஜய்க்கும் அவரது தந்தையான எஸ் ஏ சந்திரசேகர் இடையே பிரச்சனை ஏற்படுவதற்கும் புஸ்ஸி ஆனந்த் தான் காரணம் என்ன ஒரு நேரத்தில் கூறப்பட்டது.

இதற்கிடையில் விஜய் ரசிகர் மன்ற தலைவராக இருந்த புஸ்ஸி ஆனந்த் தி ரியல் எஸ்டேட் பைனான்ஸ் என அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்தார். மேலாக புஸ்ஸி ஆனந்த் அவர்களின் மாமா தான் பாண்டிச்சேரியில் எஸ் பி ஆக இருந்த விஜயகுமார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அரசியல் தலைவர்களின் நட்பு கிடைக்க முதல்வர் ரங்கசாமி, அமித்ஷா, பாஜகவின் முக்கிய தலைவர்கள் என அனைவரிடமும் நெருக்கமாக பழக்கம் வைத்து கொண்டு உள்ளவர் புஸ்ஸி ஆனந்த்.

இது மட்டுமில்லாமல் தளபதி விஜய் அவர்களை சந்திக்க வேண்டும் என்றால் புஸ்ஸி ஆனந்தின் அனுமதி இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும். தற்போது விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்த நிலையில் முக்கியமான பொறுப்புகள் அனைத்தையும் எடுத்து புஸ்ஸி ஆனந்த்தே செய்து வருகிறார். கட்சியின் மாநாடு, நிகழ்ச்சிகள் போன்றவற்றை விஜய் அவர்களுக்கு திட்டமிட்டு சொல்பவர். விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளராகவும் இருந்து வருகிறார் புஸ்ஸி ஆனந்த்.

இதற்கு காரணமாக சொல்லப்படுவது என்னவென்றால், இவரின் எளிமையான அணுகுமுறையும் களத்தில் இறங்கி வேலை செய்வதுமே விஜய் புஸ்ஸி ஆனந்த்தை விரும்புவதற்கான காரணம் என்றும் கூறுகிறார்கள். விஜயின் வார்த்தையை மீறி புஸ்ஸி ஆனந்த் எந்த செயலையும் செய்ய மாட்டார் என்பதை காட்டிலும் விஜய் மனதில் என்ன நினைக்கிறார் என்பதை புரிந்து கொண்டு அப்படியே செய்து விடுபவர் புஸ்ஸி ஆனந்த். தற்போது விஜயின் கட்சி அடுத்த தேர்தலில் களமிறங்க இருக்கும் நிலையில் விஜயின் கட்சி ஜெயித்தால் ஒரு வேளை புஸ்ஸி ஆனந்த் அவரது அமைச்சரவையில் முக்கிய பொறுப்பில் இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

admin

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

7 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

7 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

7 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

8 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

8 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

8 மணத்தியாலங்கள் ago