#image_title
சினிமாவில் தன்னுடைய 50 ஆவது ஆண்டை தொடப் போகிறார் இசைஞானி இளையராஜா. தமிழ் சினிமாவின் தனிப்பெரும் சாதனையாளர்களில் ஒருவர் இளையராஜா. உலகளவில் அவர் அளவுக்கு அதிக படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் இல்லை. இப்போதும் தன்னுடைய 82 ஆவது வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1500 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. இளையராஜா 76 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படம் மூலம் அறிமுகமான நிலையில் ஐந்தே ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் நம்பர் 1 இசையமைப்பாளராக ஆனார்.
அதன் பிறகு மிடாஸ் மன்னன் போல அவர் தொட்டதெல்லாம் தங்கமாக மாறின. அந்தளவுக்கு அவர் பாடல்கள் அடுத்த சில தசாப்தங்களுக்கு தமிழர்களை மயக்கியது. அதன் பின்னர் 1992 ஆம் ஆண்டு ரஹ்மானின் வருகைதான் அதன் பிறகு தமிழ் சினிமா இசையின் போக்கை மாற்றியது. ரஹ்மானின் வரவால் மணிரத்னம், ஷங்கர், கதிர் போன்ற முக்கியமான இயக்குனர்கள் அவர் பக்கம் செல்ல ஆரம்பித்தனர்.
இந்நிலையில் அந்த காலகட்டத்தில் நடந்த ஒரு சம்பவத்தை இயக்குனர் லியாகத் அலிகான் பகிர்ந்துள்ளார். அதில் “நான் சத்யராஜை வைத்து கட்டளை என்ற படத்தை இயக்க ஒப்பந்தம் ஆனேன். அப்போது ரஹ்மான் வந்து கலக்கிக் கொண்டிருந்தார். அதனால் ஒரு புது காம்பினேஷனாக இருக்கட்டும் என்று ரஹ்மானை அந்த படத்துக்கு ஒப்பந்தம் செய்தேன். ஆனால் விஜயகாந்தும் ராவுத்தரும் நீ எப்படி இளையராஜாவை விட்டு அவரிடம் செல்லலாம் என சொல்லி என் மனதை மாற்றினார்கள்.
அதனால் நான் மீண்டும் இளையராஜாவிடமே சென்றேன். ஆனால் நான் அவரை விட்டுவிட்டு ரஹ்மானுக்கு சென்ற கோபம் அவருக்கு உள்ளுக்குள் இருந்திருக்கும் போல, எனக்கு அந்த படத்தில் ஆறு பாடலுமே மிகவும் சுமாராகக் கொடுத்தார். அது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. அந்தபடத்தில் ஒரு பாடல் கூட ஹிட்டாகவில்லை.” எனக் கூறியுள்ளார்.
சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…
பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…
ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நோய்டாவில், சாலையில் விபத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய நபர் ஒருவரைப் பெண்மணி…
பிரான்சில் நடைபெற்ற போராட்டங்களின் போது லூயிஸ் வியூட்டன் கடை மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது சமூக வலைதளங்களில் வைரலானது.…
அமெரிக்காவில் மிக அதிக சம்பளம் தந்த கார்ப்பரேட் மார்க்கெட்டிங் வேலையைத் துறந்து, நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லும் தொழிலை தொடங்கிய…