BREAKING: மீண்டும் புயல் சின்னம்… தமிழகத்தில் வெளுத்து வாங்கும் கனமழை…. வந்தது அலெர்ட்…!

By Nanthini on கார்த்திகை 18, 2025

Spread the love

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே வங்க கடலில் வருகின்ற நவம்பர் 22ஆம் தேதி புதிய காற்றழுத்தம் வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.