கொல்கத்தா ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள நக்ரகாட்டா சமூகத் தொகுதியைப் பார்வையிடச் சென்றபோது பாஜக மக்களவை உறுப்பினர் ககன் முர்மு மற்றும் சிலிகுரி நகர எம்எல்ஏ சங்கர் கோஷ் ஆகியோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, சிலர் அவர்களைத் தள்ளிவிட்டும், அவர்கள் மீது கற்களையும் வீசினர்.
#WATCH | West Bengal: BJP MLA Shankar Ghosh and MP Khagen Murmu were attacked in Nagrakata, North Bengal today while distributing relief materials.
Visuals of the vehicle, in which they were present during the attack. pic.twitter.com/xvQ7bJ1hfw
— ANI (@ANI) October 6, 2025
அவர்கள் அந்தப் பகுதியை விட்டு வெளியேறும்போது கற்கள், காலணிகள் மற்றும் குச்சிகள் அவர்கள் மீது வீசப்பட்டதை அடுத்து அவர்களின் கார்களும் சேதப்படுத்தப்பட்டன. இதனையடுத்து பாஜக எம்பி முர்மு சல்சாவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் சிலிகுரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். நக்ரகாட்டா பகுதியின் மறுபுறத்தில் இருந்த பாஜக மாநிலத் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சாமிக் பட்டாச்சார்யா, இந்த சம்பவத்திற்கு மம்தா பானர்ஜியைக் குற்றம் சாட்டினார்.
The brutal attack on our MP Shri Khagen Murmu and MLA Dr. Shankar Ghosh in Nagrakata today have left them grievously injured. This cowardly act by the trademark TMC Goons occurred while they were en route to provide relief to flood-affected people in North Bengal.
I pray to God… pic.twitter.com/FOBfsBLAfU— Suvendu Adhikari (@SuvenduWB) October 6, 2025
