புகழ்பெற்ற கோட்பாட்டு இயற்பியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங்ஸ், 21 வயதில் ஏ.எல்.எஸ் என்ற கொடிய நரம்புத் தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டபோதும், அவரது காதலி ஜேன் வைல்ட் 1965-இல் அவரைத் திருமணம் செய்து கொண்டார். நடக்கவோ பேசவோ இயலாத நிலையிலிருந்த ஹாக்கிங்ஸை முழுமையாகப் பராமரித்து, மூன்று குழந்தைகளையும் வளர்த்து, அவரது அறிவியல் ஆராய்ச்சிகளுக்குப் பக்கபலமாக ஜேன் திகழ்ந்தார். எனினும், ஹாக்கிங்ஸிற்குச் சிகிச்சை அளிக்க நியமிக்கப்பட்ட எலெய்ன் மேசன் என்ற செவிலியருடன் அவருக்கு நெருக்கம் ஏற்பட்டது.
அந்தச் செவிலியரின் கணவரான டேவிட் மேசன் தான் ஹாக்கிங்ஸ் பேசுவதற்காகப் பயன்படுத்திய கணினி அடிப்படையிலான குரல் கருவியை உருவாக்கிய பொறியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. காலப்போக்கில் எலெய்ன் தன் கணவரையும், ஹாக்கிங்ஸ் தன் மனைவியையும் விவாகரத்து செய்ததைத் தொடர்ந்து, 1995-ஆம் ஆண்டில் இருவரும் மறுமணம் செய்துகொண்டனர். ஆயுள் முழுவதும் துணையாக இருந்த முதல் மனைவியைக் கைவிட்டு, செவிலியரை மணந்த ஹாக்கிங்ஸின் இந்த முடிவு உலகளவில் பலத்த விமர்சனங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் வழிகோலியது.
