தென்மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் இது அடுத்த 36 மணி நேரத்தில் மேற்கு -வடமேற்கு திசையில் தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து காற்று அழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை நீடிக்கும் எனவும் சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, கடலூர், விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் அதிக கன மழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
