சென்னை ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு மகப்பேறு மருத்துவமனையில், சினிமா பட பாணியில் பெண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை முகலிவாக்கத்தைச் சேர்ந்த கீதா என்ற பெண்ணுக்கு கடந்த 15-ஆம் தேதி அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. கீதாவின் கணவர் வேலைக்குச் சென்றுவிட்டதால், மருத்துவமனையில் துணையின்றி தனியாக இருந்த கீதாவை நோட்டமிட்ட பெண் ஒருவர், கடந்த 8 நாட்களாக அவருக்கு உதவி செய்வது போல் நடித்து பழகியுள்ளார்.
கடந்த 24-ஆம் தேதி கீதா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டபோது, அவருக்கு ஆட்டோ பிடித்துத் தருவதாகக் கூறி குழந்தையை வாங்கிக்கொண்ட அந்த மர்மப் பெண், கீதாவின் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் குழந்தையுடன் ஆட்டோவில் தப்பியோடினார். இதனால் அதிர்ச்சியடைந்த கீதா அளித்த புகாரின் பேரில், உதவி கமிஷனர் மற்றும் இன்ஸ்பெக்டர் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் செல்போன் சிக்னல்களைக் கொண்டு துரிதமாகச் செயல்பட்ட போலீசார், புளியந்தோப்பு பகுதியில் வசித்து வந்த கொடுங்கையூரைச் சேர்ந்த அமுலுக் பவ்ரோஸ் மேரி (29) என்ற பெண்ணை மடக்கிப் பிடித்து, குழந்தையை பத்திரமாக மீட்டனர்.
போலீசாரின் விசாரணையின் போது, அது தன் குழந்தை தான் என அமுலுக் பவ்ரோஸ் மேரியும், அவரது கணவர் தாமஸ் மற்றும் தாயாரும் வாதிட்டதால் குழந்தைக்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில், அந்தப் பெண் குழந்தையைக் கடத்தியதை ஒப்புக்கொண்டு அதிர்ச்சியூட்டும் வாக்குமூலத்தை அளித்தார். தனக்கு ஏற்கனவே முதன் திருமணத்தின் போதே கருத்தடை செய்யப்பட்டதை, இரண்டாவது கணவர் தாமஸிடம் மறைத்துவிட்டு, அவர் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்பட்டதால் தான் கர்ப்பமாக இருப்பதாக கணவர் மற்றும் அக்கம் பக்கத்தினரை நம்ப வைத்துள்ளார்.
இதற்காக வளைகாப்பு நடத்தியது மட்டுமன்றி, 10 மாதங்கள் கழித்து பிரசவ வலி என நாடகமாடி ராயபுரம் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அங்கு தனியாக இருந்த கீதாவை ஏமாற்றி, அவரது குழந்தையைக் கடத்திச் சென்று தனக்குப் பிறந்த குழந்தை என கணவரிடமும் ஊராரிடமும் கூறி இனிப்பு வழங்கிக் கொண்டாடியுள்ளார். இந்த விசித்திரக் கடத்தல் சம்பவத்தையடுத்து, குழந்தையைக் கடத்திய அமுலுக் பவ்ரோஸ் மேரி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக அவரது கணவர் தாமஸ் ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…