பார்க்கிங் தகராறில் கொடூரம்…! 3 பேரை சுட்டு கொன்ற மாநில அளவிலான துப்பாக்கி சூடு வீரன்… பகீர் வீடியோக்கள்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

By Devi Ramu on ஐப்பசி 30, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் காரை நிறுத்துவது தொடர்பான தகராறில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரை மாநில அளவிலான துப்பாக்கிச் சூடு போட்டி வீரன் ஒருவன் சுட்டுக் கொன்ற அதிர்ச்சிச் சம்பவம் தொடர்பாக பகீர் வீடியோக்கள் வெளியாகிப் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளன.

லக்னோவின் சதாத்ஜஞ்ச் பகுதியில் கடந்த அக்டோபர் 24 அன்று காரை நிறுத்துவதில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த 29 வயதான ரிஷப் சுக்லா என்ற நபர், ஷம்பு, சிவா திவாரி மற்றும் அவரது மகன் சுயேஷ் ஆகிய மூவரையும் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்துள்ளார். தான் தற்காப்புக்காகவே சுட்டதாகக் கூறியபடி, கொலையாளி கையில் துப்பாக்கியுடன் சுற்றித் திரியும் 2 நிமிட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

   

கொலையாளி ரிஷப் சுக்லா மாநில அளவில் பதக்கம் வென்ற துப்பாக்கிச் சூடு வீரன் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாகக் காவல் துறை 6 பேரைக் கைது செய்துள்ளதுடன், அலட்சியமாகச் செயல்பட்ட நிலைய அதிகாரி உட்பட இரண்டு காவலர்களைச் சஸ்பெண்ட் செய்துள்ளது. மேலும், கொலையாளி ஆக்கிரமித்துக் கட்டியிருந்த வீட்டின் பகுதிகளை லக்னோ வளர்ச்சி முகமை புல்டோசர் கொண்டு இடித்துத் தள்ளியுள்ளது.