பிரதர்… ஒரு சின்ன ஹெல்ப்… அந்தப் பேனாவை எனக்குத் தரியா?… ஆட்டோகிராப் போட்ட கையோடு ரசிகரிடம்… டீல் பேசிய ஸ்டார் வீரர்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!

By Swetha on கார்த்திகை 18, 2026

Spread the love

மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து வீரர் மேத்தியஸ் குன்ஹா தனது ரசிகர் ஒருவரிடம் செய்த வேடிக்கையான கோரிக்கை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகரின் சட்டையில் கையெழுத்திட்ட பிறகு, குன்ஹா அவரிடம் திரும்பி, “என் சகோதரரே, இந்தப் பேனாவை எனக்குக் கொடுக்க முடியுமா?” என்று அன்புடன் கேட்டுள்ளார்.

ரசிகரும் எந்தத் தயக்கமும் இன்றி கட்டைவிரலை உயர்த்திச் சம்மதம் தெரிவித்ததால், குன்ஹா அந்தப் பேனாவை எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் அங்கிருந்து சென்றார். வீரரின் இந்த எளிமையான மற்றும் இனிமையான அணுகுமுறை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

   

https://www.instagram.com/reel/DfzUjAIDV2N/?utm_source=ig_web_button_share_sheet

   

பிரேசில் நாட்டைச் சேர்ந்த முன்கள வீரரான மேத்தியஸ் குன்ஹா, ஜூன் 2025-ல் வால்வர்ஹாம்டன் அணியிலிருந்து மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இணைந்தார். அதற்கு முன்பாக அட்லெடிகோ மாட்ரிட் மற்றும் ஆர்பி லீப்ஜிக் போன்ற முன்னணி கிளப்புகளுக்காகவும் அவர் விளையாடியுள்ளார்.