இதென்ன புது ட்ரெண்டா?.. படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே இயக்குனருக்கு பல லட்ச மதிப்பிலான பரிசை கொடுத்த தயாரிப்பாளர்..!

By Mahalakshmi on ஏப்ரல் 23, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக மிகவும் பிரபலமானவர் கவின். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த லிஃப்ட் மற்றும் டாடா திரைப்படம் இரண்டுமே நல்ல வரவேற்பை பெற்றதால் முன்னணி இடத்திற்கு உயர்ந்திருக்கிறார் என்று தான் கூற வேண்டும். இந்த இரண்டு படங்களை தொடர்ந்து கவின் நடித்திருக்கும் அடுத்த திரைப்படம் ஸ்டார்.

   

பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தை இயக்கிய இளன் இப்படத்தை இயக்கியிருக்கின்றார். அதிதி போகங்கர், ப்ரீத்தி முகுந்தன் என்று இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றார். சமீபத்தில் இப்படத்தில் இருந்து வெளிவந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படம் வருகிற மே 10-ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கின்றனர்.

   

 

இதனை ரைஸ் ஈஸ்டர் என்டர்டைன்மென்ட் நிறுவனம் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா நிறுவனத்துடன் சேர்ந்து தயாரிக்கின்றது. தற்போது தமிழ் சினிமாவில் ஒரு படம் ஹிட்டானால் அப்படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் மற்றும் ஹீரோக்களுக்கு கிப்ட் கொடுப்பது வழக்கமாகிவிட்டது. விக்ரம் திரைப்படம் ஹிட்டானதை தொடர்ந்து கமலஹாசன் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு கார் ஒன்றை கிப்டாக வழங்கி இருந்தார்.

அதேபோல சமீபத்தில் சன் பிக்சர் நிறுவனமும் ரஜினி அவர்களுக்கு மிகப்பெரிய கார் ஒன்றை பரிசாக வழங்கியிருந்தார்கள். ஆனால் இந்த திரைப்படங்கள் அனைத்தும் வெளியாகி ஹிட்டான பிறகே பரிசுகள் வழங்கப்பட்டன. அதையெல்லாம் தாண்டி தற்போது புதிதாக ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. ஸ்டார் படத்தின் தயாரிப்பாளரான பெண்டலோ ஷாகர் இயக்குனர் இளனுக்கு ஹைதராபாத்தில் ஒரு பிளாட் ஒன்றை வாங்கி கொடுத்திருக்கின்றார்.