ரயில் படிக்கட்டில் நின்று சண்டை… அடுத்த நிமிடமே புதுமண தம்பதிக்கு நேர்ந்த சோகம்… வெளிச்சத்திற்கு வந்த வீடியோ…!

By Nanthini on மார்கழி 22, 2025

Spread the love

ஆந்திரா ராகு பள்ளி கிராமத்தை சேர்ந்த கொரடா சிங்காசலம் என்பவர் அதே கிராமத்தை சேர்ந்த பவானி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ரயிலில் உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது கணவன் மனைவியிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ரயில் கதவின் அருகே நின்று வாக்குவாதம் செய்த தம்பதி சிறிது நேரத்திலேயே கீழே விழுந்து உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இருவரும் ரயிலில் இருந்து கீழே விழுவதற்கு முன்பு சண்டை போட்டுக்கொண்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை பார்க்கும் போது இந்த சம்பவம் கொலையா? தற்கொலையா அல்லது விபத்தா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி தற்போது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.