சமீபத்தில் இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய “ரூ.370 பிரியாணி” பாலியல் ஜோக் விவகாரம் குறித்து, அதில் சம்பந்தப்பட்ட ஸ்டாண்ட் அப் காமெடியன் பிரணீத் மூர் தற்போது வீடியோ மூலம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். பிரபல காமெடியனான இவரது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹிமான்ஷு என்ற இளைஞர், ஒரு பெண்ணிற்கு ரூ.370-க்கு பிரியாணி வாங்கி கொடுத்ததால் அதற்குப் பதிலாக அவரிடம் பாலியல் ரீதியாக நடந்துகொண்டதை பெருமையாகவும் ஜோக்காகவும் மேடையில் பேசினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடுமையான கண்டனங்களைப் பெற்றதுடன், அந்த இளைஞர் பணிபுரிந்த தனியார் நிறுவனமும் அவரது மோசமான மனநிலையைக் கண்டித்து அவரை வேலையை விட்டே நீக்கியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து வீடியோ வெளியிட்டுள்ள பிரணீத் மூர், தனது இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டிருந்ததால் இவ்வளவு நாட்கள் பேச முடியவில்லை என்று விளக்கியுள்ளார். மேலும், “சமூக வலைத்தளங்களில் எனக்கு எதிராக வரும் எதிர்ப்புகளுக்கு நான் தகுதியானவன் தான்; அந்த இளைஞர் மேடையில் அவமரியாதையாகப் பேசியபோது, அங்கிருந்தவர்கள் சிரித்ததால் அந்த சூழலில் அடித்துச் செல்லப்பட்டு நானும் தவறான முடிவை எடுத்துவிட்டேன்” எனத் தனது தவறை ஒப்புக்கொண்டுள்ளார். தான் நினைத்திருந்தால் அந்த இளைஞரை அப்போதே தடுத்திருக்கலாம் அல்லது எதிர்த்துக் குரல் கொடுத்திருக்கலாம் என்றும், அவருக்கு மேடை அமைத்துக் கொடுத்தது தனது மிகப்பெரிய தவறு என்றும் அவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
இறுதியாக, இந்த சம்பவத்தால் மனமுடைந்த அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகக் கூறியுள்ள பிரணீத் மூர், தனக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். தனக்கு இன்னொரு வாய்ப்பு அளித்தால் ஒரு சிறந்த மனிதனாக மாறி காட்டுவேன் என்றும், இச்சம்பவம் தனக்கு ஒரு நல்ல பாடம் என்றும் உருக்கமாகப் பேசியுள்ளார். தற்போது தனது குணநலன்களையும், நகைச்சுவை உள்ளடக்கங்களையும் மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், அதனை மக்கள் எதிர்காலத்தில் தனது வேலைகளில் பார்க்கலாம் என்றும் அந்த வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த், பெங்களூரு எலகங்கா பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்துக்கொண்டு மக்காச்சோள இயந்திரங்கள் தயாரிக்கும் தொழில் செய்து…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பணி நிமித்தமாகக் காவலாளி ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அதிவேகமாக வந்த லாரி மோதிப் பரிதாபமாக…
சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகர் தெற்கு 4-வது மெயின் ரோடு பகுதியில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம்…
வடகொரியா தனது வான் எல்லை பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், மனித உதவியின்றி இலக்குகளைத் தானாகவே துல்லியமாகக் கண்டறிந்து தாக்கும்…
அமெரிக்காவில் கால்பந்து போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற ராணுவ வான்வழி சாகசத்தின் போது ஹெலிகாப்டர் மிக அருகில் பட்டாசுகள் வெடித்துச் சிதறிய…
மத்தியப் பிரதேசத்தில் மாசடைந்த அஜ்னார் நதியைத் தொடர்ச்சியாகச் சுத்தம் செய்து வந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் பிட்டு தபாஹி, நச்சுநீரால்…