திடீர் டுவிஸ்ட்..! ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சரா வரணும்… ஓபிஎஸ் ஆதரவாளர் பரபரப்பு பேச்சு… திமுகவில் இணைகிறாரா OPS..?

By Soundarya on மாசி 20, 2026

Spread the love

தமிழக சட்டப்பேரவையில் இன்று (பிப். 20) உரையாற்றிய ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் எம்.எல்.ஏ ஐயப்பன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் எனப் பேசி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் ஆசியோடு, ஓபிஎஸ்-ஸின் வாழ்த்துகளுடன் ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்பார் என்று அவர் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி வரிசையில் உள்ள ஒரு உறுப்பினர் ஆளுங்கட்சித் தலைவரைப் பாராட்டிப் பேசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஓபிஎஸ் விரைவில் திமுகவில் இணையக்கூடும் என்று அரசியல் ரீதியான யூகங்கள் பரவி வரும் சூழலில், அவரது தீவிர ஆதரவாளரான ஐயப்பனின் இந்தப் பேச்சு அந்தத் தகவலை உறுதிப்படுத்துவது போல் அமைந்துள்ளது. அதிமுகவின் உட்கட்சிப் பூசலால் ஓபிஎஸ் தரப்பு தனித்து விடப்பட்டுள்ள நிலையில், திமுக அரசுக்கு ஆதரவான இத்தகைய கருத்துகள் தமிழக அரசியலில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.