இந்திய தேர்தல் ஆணையமானது வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான சிறப்புத் தீவிர திருத்தப் பணியை (SIR) தொடங்கி இருக்கிறது. இந்த பணிக்கான விண்ணப்பப் படிவங்கள், கடந்த 2024 ஆம் வருடம் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் வழங்கப்படுகின்றது. இந்நிலையில் SIR பணிகளால் தகுதியான ஒரு ஓட்டு கூட மிஸ் ஆகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் வீடியோ வாயிலாக பேசிய அவர், ED, CBI உள்ளிட்டோரும் நமக்கு எதிராக தயாராகி கொண்டிருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மீண்டும் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்று நினைப்போரது சூழ்ச்சிகளை தகர்க்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கியுள்ளார்.
