மக்களே..! இந்த வாரம் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடைபெறாது… தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

By Soundarya on ஆவணி 13, 2025

Spread the love

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததுயடுத்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பயனடைந்து வருகிறார்கள். தற்போது 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் திமுக அரசு பல்வேறு திட்டங்களை புதிதாக தொடங்கி வைத்து வருகிறது.

அந்த வகையில் சென்னையில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  இதயம், அறுவை சிகிச்சை, பொது மருத்துவ நிபுணர்கள் இந்த முகாமில் பங்கேற்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் வாரம்தோறும் சனிக்கிழமை இந்த முகாமானது நடத்தப்படுகிறது, இந்நிலையில் ஆகஸ்ட் 16ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்திக்கான அரசு விடுமுறை என்பதால் இந்த வாரம் முகாம் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.