“விஜய் ராஜினாமா செய்த தொகுதியில் ஸ்டாலின்?”.. தமிழக அரசியலை உலுக்கும் ரகசிய பிளான்… இடைத்தேர்தலில் நடக்கப்போகும் ‘அந்த’ பயங்கர சம்பவம்…!

By Nanthini on ஆனி 25, 2026

Spread the love

தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள ஆறு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம், தற்போதே அரசியல் சூட்டை எகிற வைத்துள்ளது. இந்தத் தேர்தலில் அந்தந்தப் பகுதிகளில் பலமாக இருக்கும் உள்ளூர் நிர்வாகிகளுக்கு வாய்ப்பளித்து அழகு பார்ப்பதை விட, “நாங்களே நேரடியாகக் களமிறங்குகிறோம்” எனப் பிரதான அரசியல் கட்சித் தலைவர்களே கோதாவில் குதிக்கத் தயாராகி வருவதாகத் தெரிகிறது. குறிப்பாக, முதலமைச்சர் விஜய் அவர்கள் ராஜினாமா செய்த மிக முக்கியமான திருச்சி கிழக்குத் தொகுதியில், திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களே போட்டியிட வாய்ப்புள்ளதாக உடன்பிறப்புகள் மத்தியில் சூசகமாகப் பேசப்பட்டு வருகிறது.

இவர்களைத் தொடர்ந்து, விசிக தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரும் இந்த இடைத்தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலில் இருப்பதாகக் கூறப்படுவதால், இந்தத் தேர்தல் வெறும் ஆறு தொகுதிகளுக்கான போட்டியாக இருக்கப் போவதில்லை, மாறாகத் தமிழக அரசியல் தலைவர்களின் பலப்பரீட்சைக்கான பிரம்மாண்ட போர்க்களமாக மாறப்போகிறது என்பது மட்டும் நிச்சயம்.