“6 மாசத்துல ஆட்சி கவிழும்…. மீண்டும் ஸ்டாலின் தான் முதல்வர்”…. உதயநிதிக்கு புதுப் பொறுப்பு?…. அனிதா ராதாகிருஷ்ணன் கணிப்பால் அதிரும் தமிழக அரசியல்….!

By Nanthini on ஆடி 13, 2026

Spread the love

தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், இன்னும் ஆறு மாத காலத்தில் தற்போதைய ஆட்சி முடிவுக்கு வந்து, மீண்டும் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்பார் என்று தெரிவித்துள்ளார். மேலும், உதயநிதி ஸ்டாலின் கட்சியை வழிநடத்துவார் என்றும், திருச்சி சிவா போன்ற மூத்த தலைவர்கள் டெல்லியில் அமைச்சர்களாகப் பொறுப்பேற்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை “ரவுடி” என்றும், “அவன், இவன்” என்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஏகவசனத்தில் விமர்சித்துப் பேசியுள்ளது தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.