#BREAKING: “2000 ஆண்டுகால சண்டை இது” விட்டுக்கொடுக்க மாட்டோம்… CM ஸ்டாலின் சூளுரை..!!

By Soundarya on மார்கழி 21, 2025

Spread the love

நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரையில், தமிழர்களின் நாகரிகம் 3,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை ஆதிச்சநல்லூர் மற்றும் கீழடி அகழ்வாராய்ச்சிகள் அறிவியல்பூர்வமாக நிரூபித்துள்ளன. இல்லாத சரஸ்வதி நதி நாகரிகத்தைத் தேடி அலைவோருக்கு மத்தியில், இருக்கும் பொருநை (தாமிரபரணி) நாகரிகத்தை உலகிற்குப் பறைசாற்றுவதே எமது நோக்கம்” என்று அவர் விமர்சித்துள்ளார்.

மேலும் இது 2000 ஆண்டுகால சண்டை. இதில் நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம், தோற்றுப் போகவும் மாட்டோம். மேலும் தாமிரபரணி கரையில் அமைந்துள்ள நெல்லை (பொருநை) நாகரிகத்தின் பழமையைச் சுட்டிக்காட்டிய அவர், தமிழர்களின் பண்பாட்டு வேர்களைக் காப்பதில் திராவிட மாடல் அரசு உறுதியாக இருப்பதை வலியுறுத்தினார்.