திமுகவின் உயர்நிலைச் செயற்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த முக்கிய கூட்டத்திற்கு முன்பாகவே கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் முக்கிய சீனியர்களுடன் ஸ்டாலின் தீவிர ஆலோசனை நடத்தினார். அப்போது, கட்சியின் எதிர்கால நன்மையை மட்டுமே கருத்தில் கொண்டு மறுசீரமைப்பு நடவடிக்கைகளை தீவிரமாக எடுக்கப்போவதாக அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், நடந்து முடிந்த தேர்தல்களின் போது சீனியர்களின் சிபாரிசின் பேரில் கடைசி நேரத்தில் வேட்பாளர்கள் பட்டியலில் மாற்றங்கள் செய்யப்பட்டதாகவும், ஆனால் அப்படி சிபாரிசு செய்யப்பட்டவர்கள் யாரும் வெற்றி பெறவில்லை என்றும் முகத்திற்கு நேராகப் போட்டு உடைத்தார்.
இந்த ஆலோசனையைத் தொடர்ந்து நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில், கட்சியின் கட்டமைப்பில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. மாநிலம் முழுவதிலும் உள்ள திமுக மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கை 110 ஆக உயர்த்தப்பட்டதுடன், நிர்வாகிகளுக்கான வயது வரம்பு 70 ஆக நிர்ணயிக்கப்பட்டது. மேலும், ஒருவர் அதிகபட்சமாக 3 முறை மட்டுமே மாவட்டச் செயலாளராகப் பதவி வகிக்க முடியும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. கிளைச் செயலாளர் முதல் மாவட்டச் செயலாளர் வரை அனைத்து மட்டங்களிலும் இந்த வயது வரம்பு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
தலைமையின் இந்த அதிரடி முடிவால் எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தா.மோ.அன்பரசன், ரகுபதி, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல மூத்த நிர்வாகிகள் தங்களின் பதவிகளை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது. 96 மாவட்டச் செயலாளர்களுக்கு தலா 2 சட்டமன்றத் தொகுதிகளும், 14 மாவட்டச் செயலாளர்களுக்கு தலா 3 தொகுதிகளும் பிரிக்கப்பட உள்ளன. இதன் மூலம் தற்போதுள்ள 77 மாவட்டச் செயலாளர்களில் 13 பேர் பதவி இழப்பதுடன், சுமார் 46 புதிய மாவட்டச் செயலாளர்கள் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர். இந்த அறிவிப்பு திமுகவின் சீனியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துரைமுருகன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இந்த மாற்றங்களுக்குத் தொடக்கத்தில் தயக்கம் காட்டியபோதிலும், ஸ்டாலின் தனது முடிவில் உறுதியாக இருந்தார். இதனால் சீனியர்கள் அனைவரும் வேறு வழியின்றி அமைதி காக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அடுத்த கட்டமாக, தங்கள் பதவிகளை இழப்பதைத் தவிர்க்க அல்லது தங்களின் ஆதிக்கத்தைத் தக்கவைக்க வாரிசுகளுக்குப் பொறுப்பு கேட்கும் முயற்சியில் அவர்கள் இறங்கியுள்ளனர். ஆனால், ஒரே நபர் அல்லது குடும்பத்தின் கீழ் அதிகாரம் குவிவதைக் கட்டுப்படுத்தவே இந்த மாற்றங்கள் செய்யப்படுவதால், வாரிசுகளுக்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்குமா என்பது மிகப்பெரிய சந்தேகமாகவே நீடிக்கிறது.
பீகார் மாநிலம் பக்ஸார் மாவட்டத்தைச் சேர்ந்த ஊரக வளர்ச்சி அதிகாரி அல்பிதா சிங், கடந்த எட்டு மாதங்களாகத் தனக்கு சம்பளம்…
பெங்களூரு யெலஹங்கா பகுதியில், தனது மகளுடன் பழகியதாகக் கூறி கேரளாவைச் சேர்ந்த 22 வயது தொழிலாளியை அவரது முதலாளியே அடித்துக்…
உத்தரப் பிரதேச மாநிலம் பராபங்கியைச் சேர்ந்த சந்தீப் வர்மா என்பவரும் ரீமா வர்மா (30) என்பவரும் காதலித்து திருமணம் செய்து…
திருவாரூர் வடம்போக்கி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்ராமன் (73). இவர் அங்குள்ள தெட்சிணாமூர்த்தி மடத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், தியாகராஜர் கோயில்…
பெங்களூருவின் பன்னேருகட்டா பகுதி அருகே சி.கே. பாளையா சாலையில் அமைந்துள்ள 'ஹலேவூரு கபாப் சென்டர்' உணவகத்தில் அக்டோபர் 28 அன்று…
தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை வெடிக்கும்போது ஏற்படும் விபத்துகளால் கடுமையான தீக்காயங்கள் மற்றும் நிரந்தர பார்வை இழப்பு ஏற்படக்கூடும் என்று…