தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வரவு ஒரு ‘கவர்ச்சிகரமான மாயாஜால வெற்றி’ என வர்ணித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், அக்கட்சியின் அபரிமிதமான வளர்ச்சியை மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளதோடு, வரும் காலங்களில் திமுகவை பலப்படுத்த அதிரடி நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ளார். திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆவேசமாகப் பேசிய அவர், கட்சி அமைப்பில் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டு வரப்போவதாகவும், உடல்நிலை அல்லது மற்ற காரணங்களால் சுறுசுறுப்பாகச் செயல்பட முடியாதவர்கள் தாங்களாகவே முன்வந்து பதவிகளை ராஜினாமா செய்துவிடுமாறும் கறாராக அறிவுறுத்தியுள்ளார்.
கோஷ்டி பூசல்கள் கட்சியின் வெற்றி வாய்ப்பைத் தடுத்துவிடும் என எச்சரித்த அவர், உட்கட்சி ஒற்றுமை சிதைந்தால் அது மற்றவர்களுக்குச் சாதகமாகிவிடும் என்பதைச் சுட்டிக்காட்டி, நிர்வாகிகள் அனைவரும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைக் கைவிட்டு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
